நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 8:26 am

நாட்டில் தொடர்ந்தும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் அபாயம் நிலவும் 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து புகை விசிறும் செயற்பாடுகள் இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகளை பரவலான முறையில் முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 225 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் 70,000 அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்