திருகோணமலையில் ஹெரோய்ன் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

திருகோணமலையில் ஹெரோய்ன் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 1:29 pm

திருகோணமலை நகரில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருவரும், அபயபுர பகுதியில் இரண்டு பெண்களும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிடைத்த தகவலின் பிரகாரம் திருகோணமலை தலைமையக பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் மூலம் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்