தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒரே நாளில் 20 கோடி இந்திய ரூபா நட்டம்

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒரே நாளில் 20 கோடி இந்திய ரூபா நட்டம்

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒரே நாளில் 20 கோடி இந்திய ரூபா நட்டம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2017 | 4:40 pm

தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஒரே நாளில் 20 கோடி (இந்திய) ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

GST வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி செலுத்த முடியாது என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கேளிக்கை வரியை இரத்து செய்ய வற்புறுத்தி சினிமா திரையரங்குகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்து அவர்கள் நேற்று (03) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையரங்குகளை மூட வேண்டாமென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை.

தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதால் நேற்று ஒரே நாளில் மட்டும் டிக்கெட் கட்டணமாக வசூலாக வேண்டிய 15 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கேண்டீன், வாகனங்கள் ‘பார்க்கிங்’ கட்டணம் மூலம் வசூலாகக்கூடிய 5 கோடி ரூபாவுடன் சேர்த்து மொத்தம் 20 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்