ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமனம்

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமனம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 9:22 am

அரசாங்கத்தின் சிரேஷ்ட மட்டத்திலான மூன்று பதவிகளுக்கு ஜனாதிபதியினால் இன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலாளராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்டின் பெர்னாண்டோ இதுவரைக் காலமும் கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டு வந்தார்.

பாதுகாப்புச் செயலாளராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று ஜனாதிபதியிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்டார்.

அவர் இதுவரைக் காலமும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்