சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பொதுமன்னிப்புக் காலம் நீடிப்பு

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பொதுமன்னிப்புக் காலம் நீடிப்பு

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பொதுமன்னிப்புக் காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 11:00 am

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஜூன் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை இந்த விசேட பொது மன்னிப்புக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 4500 பேர் மீளவும் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

சவுதியில் தொடர்ந்தும் சட்டவிராதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து வெளியேறாமல் தங்கியிருப்பவர்களை கைதுசெய்வதுடன், அவர்களிடம் அபராதம் அறவிடுவதற்கும், நாடு கடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்