கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2017 | 5:27 pm

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்த ஒன்ரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளராகப் பதவியேற்றதையடுத்து, ஆளுநர் பதவிக்கு ரோஹித போகொல்லாகம ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய மூத்த சிவில் அதிகாரி பி.பி.அபேயகோன் தனிப்பட்ட காரணங்களால் பதவியை இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே ஒன்ரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்