கிழக்கில் கூட்டணியாக இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க பேச்சுவார்த்தை

கிழக்கில் கூட்டணியாக இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2017 | 9:40 pm

கிழக்கு மாகாணத்தில் கூட்டணியாக இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட அந்தக் கட்சியிலிருந்து விலகிய தரப்புகள் மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்கள் தம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக அதாவுல்லா குறிப்பிட்டார்.

கூட்டமைப்பாக இணைந்து ஓரணியில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், தேர்தலொன்று நடைபெறுமாயின், கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா கூறினார்.

முதற்கட்டமாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட சமூக ரீதியான சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்