இலங்கையில் தெற்காசியாவின் உயரமான கட்டடம்?

இலங்கையில் தெற்காசியாவின் உயரமான கட்டடம்?

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2017 | 8:21 pm

இலங்கை முதலீட்டு சபையுடன் World Capital Center எனும் திட்டத்திற்காக 2 பில்லியன் ரூபா பெறுமதியான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தேச திட்டத்திற்கு அமைவாக, 117 மாடிகளைக் கொண்ட 625 மீற்றர் உயரமான கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கும் World Capital Center திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாக நிறைவடைந்தால், ஆசியாவின் மூன்றாவது உயரமான கட்டடமாகவும் உலகின் ஒன்பதாவது கட்டடமாகவும் இது பதிவாகும்.

இதற்கு முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் அமான் வர்த்தக நிறுவனம் முன்வந்துள்ளது.

எனினும், இதன் தலைமை அலுவலகம் கொழும்பு நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவே அந்த வர்த்தக நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பரிசோதித்த போது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கிளை ஒன்று மாத்திரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதன் இணையத்தளம் சான்று பகர்கின்றது.

முதலீடு செய்யப்படும் World Capital Center நிறுவனத்தின் இணையத்தளம் மற்றும் அல் அமான் கூட்டு நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைவாக இந்த இரண்டு நிறுவனங்களினதும் தொலைபேசி இலக்கங்கள் ஒன்றாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்