அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2017 | 7:55 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் (05) மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பினை ஒரு வாரத்திற்கு பிற்போட இன்று பிற்பகல் தீர்மானிக்கப்பட்டது.

தமக்குக் கிடைத்த கருத்துக்கள், கோரிக்கைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை கூட்டத்தில் ஆராய்ந்து இந்த தீர்விற்கு வந்ததாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அருத்கே குறிப்பிட்டார்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டால் நோயாளர்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதால் ஒரு வாரத்திற்குப் பிற்போட தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்