அரச வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை பிற்போடுமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

அரச வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை பிற்போடுமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2017 | 12:34 pm

நாளை முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்பை பிற்போடுமாறு கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இந்த வேண்டுகோளை விடுத்தார்.

டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியர்கள் தங்களின் பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்ற அணிதிரளவேண்டும் என்றும் ஆண்டகை கேட்டுள்ளார்.

அத்துடன் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கும் பங்களிப்பை நல்குமாறு பேராயர் பேர்ருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரச வைத்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்