டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பால் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பால் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2017 | 8:30 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 71,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் கடந்த ஆறு மாத காலத்தில் டெங்குக் காய்யசலினால் 226 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் மாத்திரம் 658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து வாட்டுக்களும் நோயாளர்களால் நிரம்பியுள்ளன.

வைத்தியசாலையில் 928 பேர் தங்கிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 591 பேர் டெங்கு நோயாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் முப்படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வைத்தியசாலையின் இடவசதி போதாமையினாலும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்