வெகுவிமர்சையாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா

வெகுவிமர்சையாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா

வெகுவிமர்சையாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2017 | 5:34 pm

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று நடைபெற்றது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட அபோஸ்தலிக்க பரிபாலகர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில்,அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபர்ட் அந்ராடி ஆண்டகை, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் நோயல் ஆண்டகை ஆகியோரால் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது

பின்னர் மடு அன்னையின் திருச் சொரூப பவனி ஆரம்பமானது

திருச்சொரூப ஆசிர்வாதத்திலும் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மடுத் திருத்தல ஆடித் திருவிழாவில் இம்முறையும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகைதந்த பெருந்திரளான யாத்திரியர்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்