பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள் மீது அரசாங்கத்தினால் கடும் நடவடிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள் மீது அரசாங்கத்தினால் கடும் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2017 | 8:28 pm

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள் மீது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகையில் இன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை பிரசுரித்திருந்தது.

சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வைத்தியர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஐலண்ட் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் சிகிச்சை நிலையங்களில் சேவையாற்றும் அரச வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை நிறுத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் வருடமொன்றுக்கு 132 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக சுகாதார அரமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்