ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் மோதலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் மோதலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2017 | 4:46 pm

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக் கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் போது இரண்டு மாணவர் குழுக்களிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதேவெளை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருத்து வெளியிட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்