உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2017 | 7:56 pm

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கட்டாயம் நடாத்த வேண்டியதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் பிற்போடுவது, தேர்தல் கால அட்டவணையை தாமதப்படுத்தும் செயற்பாடு என சுதந்திரமானதும் நீதியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் மேலும் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை அது பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாம் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட்டிடம் வினவிய போது, குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரான தற்போதை நிலமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

அந்த செயற்பாடுகள் நிறைவடையும் வரை எதனையும் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்