இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் காலமானார்

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2017 | 8:43 pm

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் காலமானார்.

2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நிரூபம் சென் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியிருந்தார்.

1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார்.

இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னதாக பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றியிருந்தார்.

நிரூபம் சென் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய வதிவிட பிரதிநிதி என்பதுடன் ஐக்கிய நாடுகளின் வருடாந்த அமர்வில் அவைத் தலைவரின் விசேட சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்