பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்

பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்

பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 5:50 pm

உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய Petya இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணினிகளின் செயற்பாட்டை முடக்கும் புதிய வகை Ransomware இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயற்பட வைக்க பிணைத்தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயற்படச் செய்ய பிணைத்தொகை கோரும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் நோக்கம் என
யூரோபோலின் சைபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஜேக் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

மேலும், கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கமென தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் ஆகியன இந்த இணைய வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. ரஷ்யா, ஜெர்மனியின் பல நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன.

உக்ரைனில் ATM கள், விமானப் போக்குவரத்து, வங்கி சேவை உள்ளிட்டவை இணைய வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகின.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்