தலைமன்னார் – கொழும்பு ரயில் போக்குவரத்திற்கான ஆசனப் பதிவு முறை அறிமுகம்

தலைமன்னார் – கொழும்பு ரயில் போக்குவரத்திற்கான ஆசனப் பதிவு முறை அறிமுகம்

தலைமன்னார் – கொழும்பு ரயில் போக்குவரத்திற்கான ஆசனப் பதிவு முறை அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 3:11 pm

தலைமன்னார் முதல் கொழும்பு வரையான ரயில் போக்குவரத்திற்கான ஆசனப் பதிவு முறை நேற்று (30) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மன்னார் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரயில்வே திணைக்கள உதவி ஆணையாளர் என்.ஜே. இடிபொல, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதேச செயலாளர் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முதல் ஆசனப் பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பெற்றுக்கொண்டார்.

தலைமன்னாருக்கான ரயில் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்