உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நோர்வே நிபுணர் குழு இலங்கை வருகிறது

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நோர்வே நிபுணர் குழு இலங்கை வருகிறது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 9:44 pm

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நோர்வேயிலிருந்து நிபுணர் குழுவொன்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் நடைபெற்றது.

பிரதேச மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களுக்கு முன்னுரிமை அளித்து உமா ஓயா திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

மக்களின் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்