இரணைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

இரணைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

இரணைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 3:19 pm

இரணைத்தீவு கடற்பரப்பில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட 11 வலைகளும் GPS தொழில்நுட்பக் கருவிகள் இரண்டும் மீன்பிடி உபகரணங்கள் சிலவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீனவர்களை கிளிநொச்சி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்