இந்தியாவில் அமலுக்கு வந்தது GST வரி

இந்தியாவில் அமலுக்கு வந்தது GST வரி

இந்தியாவில் அமலுக்கு வந்தது GST வரி

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 4:47 pm

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST வரி (Goods and Services Tax) நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் நிலவிவந்த பல்வேறு விதமான மாநில அரசின் வரிகள் நீக்கப்பட்டு, ஒரே விதமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று (30) நடந்த சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி GST வரித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஒற்றை வரிவிதிப்பின் மூலம் வரி வருவாய் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என இந்திய அரசு நம்புகிறது.

இந்த வரி சீர்திருத்தத்தின் மூலம் பொருளாதாரம் 2 சதவீதம் அளவுக்கு வளரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வரிவிதிப்பு முறையின்படி, பொருட்களும் சேவைகளும் 5, 12, 18, 28 ஆகிய நான்கு விதமான வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

காய்கறிகள், பால் போன்றவற்றிற்கு இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முறையின் காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலையும் சேவைகளின் கட்டணமும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்