ஆறு முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பயணத்தடையின் திருத்தப்பட்ட வடிவம் அமலுக்கு வந்தது

ஆறு முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பயணத்தடையின் திருத்தப்பட்ட வடிவம் அமலுக்கு வந்தது

ஆறு முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பயணத்தடையின் திருத்தப்பட்ட வடிவம் அமலுக்கு வந்தது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 5:03 pm

பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகள் மீது விதித்த இரண்டாவது தற்காலிக பயணத்தடையின் திருத்தப்பட்ட வடிவம் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் 29 ஆம் திகதி அமலுக்கு வந்த நிர்வாக உத்தரவில் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 90 நாட்களுக்கும் அகதிகளுக்கு 120 நாட்களுக்கும் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டவர்களின் குடியேற்றம் தொடர்பில் கடுமையான அணுகுமுறையை தன் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக்கிய ஜனதிபதி ட்ரம்ப், பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தற்காலிகப் பயணத்தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என ட்ரம்ப் கூறினாலும், இது இஸ்லாமியர்களை நியாயமற்ற முறையில் குறிவைக்கும் செயல் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரம்பின் இந்த தடை உத்தரவு அமலானதை அடுத்து நியூயார்க்கில் ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் பிறப்பித்த பயணத்தடை ஆணை பெருந்திரள் போராட்டங்களைத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் குழப்பத்தையும் விளைவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்