கல்குடாவில் செய்தி சேகரிக்கச்சென்று தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு

கல்குடாவில் செய்தி சேகரிக்கச்சென்று தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 8:26 pm

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்படும் எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தாக்குதலுக்குள்ளான இரு ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்தது.

கல்குடா எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் நல்லதம்பி நித்தியானந்தன், சுதந்திர ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஜூலை மாதம் 10 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்