மேல் மாகாணத்தில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அகற்றிய 298 பேர் கைது

மேல் மாகாணத்தில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அகற்றிய 298 பேர் கைது

மேல் மாகாணத்தில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அகற்றிய 298 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 3:34 pm

மேல் மாகாணத்தில் குப்பைகளை முறையற்ற விதத்தில் தரம் பிரிக்காமல் அகற்றிய 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் நுகேகொட பகுதியில் 72 பேரும் களனியில் 41 பேரும் கம்பஹாவில் 54 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொழும்பு வடக்கு பகுதியில் 26 பேரும் மத்திய கொழும்பு பகுதியில் 30 பேரும் கொழும்பு தெற்கு பகுதியில் 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவிர, கல்கிசை, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் குப்பைகளை முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்