மெஸ்ஸிக்கு இன்று திருமணம்

மெஸ்ஸிக்கு இன்று திருமணம்

மெஸ்ஸிக்கு இன்று திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 5:03 pm

நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்ஸிக்கும் அவரது தோழியான அன்டோனல்லா ரோகுசோவுக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களது திருமணம் மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் நடக்கிறது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது ஆரம்ப கால தோழியான அன்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு தியாகோ (4), மேடியோ (1) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அன்டோனல்லா ரோகுசோவை முறைப்படி திருமணம் செய்ய மெஸ்ஸி முடிவு செய்தார்.

இவர்களின் திருமணத்தில் கலந்துகொள்ள 260 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், பிரபல பாடகி ‌ஷகிரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்