பிலியந்தலையில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

பிலியந்தலையில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

பிலியந்தலையில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 4:18 pm

பிலியந்தலையில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், துப்பாக்கிச்சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட காரொன்றும் டிப்பர் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

57 மற்றும் 31 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்