பிரதி மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர்கள் 11 பேர் இடமாற்றம்

பிரதி மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர்கள் 11 பேர் இடமாற்றம்

பிரதி மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர்கள் 11 பேர் இடமாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 4:26 pm

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஒன்பது பேரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எல்.கொடித்துவக்கு, சப்ரகமுவ பிராந்தியத்திலிருந்து களுத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, களுத்துறைக்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜீ.கே.பெரேரா சப்ரகமுவ பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகம், கொழும்பு மத்தி, களுத்துறை, அம்பாறை, பாணந்துறை, குருநாகல், பண்டாரவளை, மொனராகலை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய பிராந்தியங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்