நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 5:36 pm

தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார்.

45 வயதாகும் தபுவிடம் தொகுப்பாளர் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

“நான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என கேட்கிறீர்கள். இதற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான். நானும் அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரரின் நண்பர். என் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருவார். யாராவது என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்களைப் பிடித்து மிரட்டுவார். என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார்” என தபு பதிலளித்தார்.

நடிகர் அஜய் தேவ்கன் 1999 ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை தபு தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்