அழிவைத் தோற்றுவித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றார்கள்: ஜனாதிபதி

அழிவைத் தோற்றுவித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றார்கள்: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2017 | 8:29 pm

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உறுதியளித்தார்.

ஹட்டன் – ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பண்டாரவளையில் நேற்றைய தினம் (28) மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த உமா ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

[quote]போராட்டம் செய்த மக்களின் பக்கம் தான் நான் நிற்கின்றேன். அவர்களுடன் போராட்டத்தில் நான் இணைந்துகொள்வேன். இந்த பிழையை செய்தவர்களைத் தேடுகின்றோம். இவ்வாறான அழிவைத் தோற்றுவித்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்கள். பொறியியலாளர்களின் ஆலோசனையின்றி கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. இதனை பழைய அரசாங்கமே மேற்கொண்டது. ஈரானிடம் இருந்து நாம் திருப்பி செலுத்த முடியாதளவு பணத்தை உமா ஓயா திட்டத்திற்காக முன்னைய அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.[/quote]

என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்