வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை

வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை

வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2017 | 7:03 am

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் ஆகிய உறுப்பினர்களுடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையில் இந்த தொடர் விசாரணைகள்
இடம்பெறவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணைகளுக்கான திகதிகள் இடப்பட்டுள்ளன.

விசேட வழக்கு தொடுனரான சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்