வருடத்தின்  இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2017 | 12:16 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1261 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகம் மற்றும் போதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கள் சம்பவித்தமைக்கான பிரதான காரணம் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் விபத்துக்களின் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களுக்கு மூன்று நாள் செயலமர்வை அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் – உலுக்குளம் வீதியின் சமகிபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வாகனம் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணாருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 7 . 50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 42 வயதுடைய புலங்குலம விகாரையில் கற்பிக்கும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற கெப் வாகனத்தின் சாரதியை இன்று (28) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்