வட மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் விசாரிக்கப்பட வேண்டும்; அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை

வட மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் விசாரிக்கப்பட வேண்டும்; அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை

வட மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் விசாரிக்கப்பட வேண்டும்; அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 7:39 pm

வட மாகாண சபையின் அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர் அரியக்குட்டி பரஞ்சோதி, அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு பிரேரணையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வட மாகாண சபையின் அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காகவும் அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில், சுதந்திரமானதும் சட்டப்பூர்வமானதுமான விசாரணை நடத்தப்படலாம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதால் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பாக மாகாண சபையே விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என 2016 இல் தான் வலியுறுத்தியதாகவும் அரியக்குட்டி பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்