முஸ்லிம் நாடுகளுக்கு பயணத்தடை: உத்தரவின் ஒரு பகுதியை அனுமதித்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

முஸ்லிம் நாடுகளுக்கு பயணத்தடை: உத்தரவின் ஒரு பகுதியை அனுமதித்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

முஸ்லிம் நாடுகளுக்கு பயணத்தடை: உத்தரவின் ஒரு பகுதியை அனுமதித்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 5:07 pm

சர்ச்சைக்குரிய பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை அனுமதிப்பதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்குக் கிடைத்த வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் உத்தரவின் ஒரு பகுதியை அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அந்த உத்தரவின் சில பகுதிகளை உடனடியாக நிறைவேற்றலாமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கர்களுடனோ, அமெரிக்க அமைப்பு அல்லது நிறுவனங்களுடனோ நியாயமான தொடர்பு இல்லாவிட்டால், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அதேசமயம், ட்ரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என கூறும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அதனை எதிர்த்து தொடர்ந்தும் போராடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்