பிரமுகர் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மீது தாக்குதல்

பிரமுகர் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 9:04 pm

பிரமுகர் ஒருவரைக் கொலை செய்யும் நோக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கப்பட்டதாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபரை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தினத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடமையிலிருந்த உத்தியோகத்தர்கள் தொடர்பிலான விபரத்தை அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்கள் ஐவரையும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் கிளிநொச்சி நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்