பண்டாரவளையில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை

பண்டாரவளையில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2017 | 10:06 am

பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி தற்போது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உமா ஓயா திட்டத்தினால் தமது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் பொது போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உமா ஒயா திட்டத்தினால் நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்