இரண்டு மாத காலத்தில் இரண்டாவது சைபர் தாக்குதல்: ஐரோப்பிய வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு

இரண்டு மாத காலத்தில் இரண்டாவது சைபர் தாக்குதல்: ஐரோப்பிய வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு

இரண்டு மாத காலத்தில் இரண்டாவது சைபர் தாக்குதல்: ஐரோப்பிய வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 4:46 pm

Wanna Cry Ransomware ஐ அடுத்து, புதிய Ransomware ஒன்று உக்ரைன் நாட்டின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றைத் தாக்கியுள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மின்துறை அலுவலகங்கள், வங்கிகள், விமான நிலையம் மற்றும் அரச அலுவலகக் கணினிகள், தனியார் நிறுவனங்களின் கணினிகளை இந்த புதிய Ransomware தாக்கியுள்ளது.

இந்த Ransomware செர்நோபிள் அணு உலையையும் பாதித்துள்ளதுடன், விமான நிலைய முனையம், ATM இயந்திரங்களும் இலக்காகியுள்ளன. ரஷ்ய நிறுவனங்களையும் இது விட்டுவைக்கவில்லை.

உலகளாவிய ரீதியில் கப்பல் சேவையை முன்னெடுக்கும் A.P. Moller-Maersk நிறுவனத்தின் செயற்பாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிறுவனத்தின் உக்ரைன் அலுவலகத்தில் Ransomware தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த Hacking சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விபரம் இதுவரை அறியப்படவில்லை.

Petya இனத்தைச் சேர்ந்த இந்த Ransomware ஐ 61 ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் மட்டுமே வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய சைபர் தாக்குதலாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்