அமீர்கானின் ‘தங்கல்’ படம் புதிய வசூல் சாதனை

அமீர்கானின் ‘தங்கல்’ படம் புதிய வசூல் சாதனை

அமீர்கானின் ‘தங்கல்’ படம் புதிய வசூல் சாதனை

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2017 | 11:37 am

அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம் .2000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் 800 கோடியை வசூலித்திருந்தது.

இந்நிலையில், இப்படம் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது, சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் 550 கோடி வசூல் செய்து 1000 கோடியை தாண்டியது, தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்நிலையில், இப்படம் தற்போது 2000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய திரைப்படங்களில் 2000 கோடி வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘தங்கல்’ பெற்றுள்ளது.

இப்படத்திற்கு அடுத்த இடத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தங்கல்’ படத்தை நித்தேஷ் திவாரி என்பவர் இயக்கியிருந்தார், மல்யுத்தத்தை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு சீனாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை இப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்