கம்புறுபிட்டியவில் பிள்ளைகள் மூவரையும் தூக்கிட்டு கொன்ற தந்தை தானும் தற்கொலை

கம்புறுபிட்டியவில் பிள்ளைகள் மூவரையும் தூக்கிட்டு கொன்ற தந்தை தானும் தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2017 | 11:44 am

மாத்தறை கம்புறுபிட்டிய பெரலிஅத்துர பகுதியில் தனது பிள்ளைகள் மூன்று பேரையும் தூக்கிட்டு கொன்ற தந்தையொருவர் தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரலிஅத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

வீட்டின் வரவேற்பரை முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டிற்கு பின்புரமாகவுள்ள மரமொன்றில் தூக்கிட்ட நிலையில் நான்கு பேரின் சடலங்களும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

16, 10 வயதான பெண் பிள்ளைகளும், 14 வயதான மகனும் 44 வயதான தந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை மற்றும் மரண பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்