புனித நோன்புப் பெருநாள் இன்று

புனித நோன்புப் பெருநாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 2:08 pm

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒரு மாதகாலமாக நோன்பு நோற்ற முஸ்லிம்கள் இன்று மனமகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

நோன்பானது ஒரு முஸ்லிமினுடைய , மனக் கட்டுப்பாட்டை உருவாக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமைந்துள்ளது.

வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.

காலையிலே குளித்து நறுமணம் பூசி புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம் மக்கள் அங்கு விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபடுவர்.

அதன் பின்னர் குடுபத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த நாளைக் கொண்டாடுவர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்