புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 2:58 pm

ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் பரஸ்பர கௌரவம், சமத்துவம், ஈகை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பண்புகள், மனிதனது விடுதலை சுயநலத்திலன்றி பிறர் நலம் பேணுவதிலேயே தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச சமத்துவம் என்பதே , ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளின் மூலம் முழு மனித சமூகத்திற்கும் விடுக்கப்படும் முக்கிய செய்தி என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமய ஆன்மீக மற்றும் சமூக பெறுமானங்களின் அடிப்படையில் எல்லாவற்றிலும் சமத்துவத்தைப் பேணுவதே அதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிறரது கஷ்டங்களை புரிந்துகொள்வதுடன் தமக்கு தாம் நேர்மையாக இருப்பதனால் மனிதம் வளம்பெறும் என்பதை ரமழான் நோன்பு நினைவுபடுத்துவதாக ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பின் ஊடாக கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதே முஸ்லிம்களின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்பார்ப்பினை யதார்த்தமாக மாற்றிக் கொள்வதற்கு நோன்பு காலத்தில் உடல் மற்றும் உள ரீதியாக வளர்த்துக் கொள்ளப்படும் பெறுமானங்களை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பேணிக்கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இம்முறை நோன்புப் பெருநாள் இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் சாமாதானம் நல்லிணக்கம் மிகுந்த மகிழ்ச்சியான பெருநாளாக அமைய வேண்டும் எனவும் பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்ட ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரமழான் பண்டிகை மக்களிடையே சமாதானம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்