நில விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளது – கேப்பாப்பிலவு மக்கள்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 8:37 pm

அரசியல்வாதிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது, தமக்குள் முரண்படுகின்றமை வேதனையளிப்பதாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் தமது நிலம் விடுவிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் வழங்கிய வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி, கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

சாத்வீகப்போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸாரையும் இராணுவப் புலனாய்வாளர்களையும் இன்று அவதானிக்க முடிந்ததாக மக்கள் கூறினர்.

நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த மாதம் 18 ஆம் திகதி சந்தித்தார்.

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் அமைந்துள்ள 432 ஏக்கர் காணி ஒரு மாதத்தில் விடுவிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்