சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 8:47 pm

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய விசேட விமான இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜீ.வீ.காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்துள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை மேலதிக விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாடுகடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுடன், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் தலா ஒரு பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்