காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 7:33 pm

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான திருத்தப் பிரேரணைக்கு சபை அங்கீகாரமளித்தது.

குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் இந்த அலுவலகத்திற்கு கிடையாதென இதன்போது பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த அலுவலகத்துடன் தொடர்புடையோர், இரகசியத் தன்மையை பேணிப் பாதுகாப்பதுடன் அதற்கு உதவ
வேண்டும் எனவும் காணாமற்போனோர் தொடர்பான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகள், அலுவலகத்தின் தகவல்கள் தொடர்பாக ஏற்புடையதல்ல எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்