மாத்தறையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது புகைப்பட ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மாத்தறையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது புகைப்பட ஊடகவியலாளர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 7:54 pm

சுகாதார அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாத்தறையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

மாணவர்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடைபெற்றது.

விசேட பொலிஸ் குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, நேற்று (22) காலி மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் மீதும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்