பூர்வீகக் காணியில் மீள்குடியேற்றுமாறு கோரி இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

பூர்வீகக் காணியில் மீள்குடியேற்றுமாறு கோரி இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 4:11 pm

கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பூர்வீகக் காணியில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி கடந்த 54 நாட்களாக இரணைத்தீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் மக்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, வீதியின் ஒரு புறமாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க மக்கள் இணங்கினர்.

பூநகரி பிரதேச செயலாளர் வருகை தரும் வரை தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்ததால், அவர் அங்கே வருகை தந்து, எதிர்வரும் புதன்கிழமை (28) பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானம் குறித்து அறிவிப்பதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்