சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களால் 1 கோடி ரூபா பொருட்சேதம்

சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களால் 1 கோடி ரூபா பொருட்சேதம்

சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களால் 1 கோடி ரூபா பொருட்சேதம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 3:18 pm

சுகாதார அமைச்சு வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களால் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அமைச்சு வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று (22) மதிப்பீடு செய்யப்பட்டதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான டெம்பிட்டிய சுகதானந்த தேரர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு வருகை தந்த மாளிகாகந்த நீதவான் துலானி வீரவர்தன, சந்தேகநபரான தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்