கிரிக்கெட் மட்டையால் அடித்து மகனைக் கொன்றார் தந்தை: புத்தளத்தில் சம்பவம்

கிரிக்கெட் மட்டையால் அடித்து மகனைக் கொன்றார் தந்தை: புத்தளத்தில் சம்பவம்

கிரிக்கெட் மட்டையால் அடித்து மகனைக் கொன்றார் தந்தை: புத்தளத்தில் சம்பவம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 4:24 pm

புத்தளத்தில் தந்தையொருவர் தனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த தந்தை கிரிக்கெட் மட்டையால் மகனைத் தாக்கியுள்ளார்.

இதன்போது, மயக்கமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 24 வயதான இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.

54 வயதான தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்