எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 4:45 pm

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள் பழமையான அந்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறித்த செயற்கைக் காலானது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைக் காலானது மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. தோலினாலான வாரினைப் பொருத்திக் கட்டப் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது எகிப்திய நிபுணர்கள் குறித்த செயற்கைக் காலினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்