ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 5:07 pm

தென்னாபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தென்னாபிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிறிஸ் ஹானி மாவட்டம். இங்கு அமைந்துள்ள சிறிய கிராமமே லேடி பிரரி. இந்த கிராமத்தில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டிதான் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இந்த குட்டி காணப்படுவது தான் இதற்கு காரணம்.

இதைக் கண்டவுடன் கிராம மக்கள் அனைவரும் இந்த குட்டியானது சாத்தானால் அனுப்பப்பட்டுள்ளது என்று பேசிக்கொண்டதால், கிராமத்தில் பரபரப்பு உண்டானது.

இது தொடர்பான தகவல் தெரிய வந்தவுடன், கிராமப்புற அபிவிருத்தி அதிகாரிகள் உடனடியாக மருத்துவர் ஒருவருடன் அங்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது கண்டிப்பாக ஆட்டுக்குட்டிதான். மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், இந்த குட்டி கருவிலிருக்கும் பொழுது, அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் குட்டி பிறக்கும் பொழுதே இறந்த நிலையில், இவ்வாறு பிறந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் மக்களின் சந்தேகம் தீராத காரணத்தால், அந்த குட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்