அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 3:32 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று (22) காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்

எவ்வாறாயினும், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் வழமை போன்று இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை எதிர்கொண்டு வைத்தியசாலைப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்